இவர்களுக்கு அளித்த ஆணித்தரமான பதிலை ஏனையோரும் அறிய வேண்டும் என்பதற்காக இங்கே குறிப்பிடுகின்றேன். உலக முடிவு திகதியை எவருக்கும் சரியாகச் சொல்ல முடியாது. அப்படிச் சொல்ல முடியாது என அல்லாஹ் திருக் குர்ஆனில் திட்டவட்டமாகக் கூடியுள்ளான்.
குர்ஆன் முஸ்லிம்களுக்கு மட்டும் இறக்கப்பட்டதல்ல. உலக மக்கள் அனைவருக்கும் கொடுக்கப்பட்ட நல்லுபதேசமாகும். ஆகவே உலக முடிவு பற்றிய உண்மையை குர்ஆன் ஆதாரத்தை கொண்டே எடுத்துக் கூற விரும்புகின்றேன்.
திருக் குர்ஆனில் (68ம் அத்தியாயம் 52ம் வசனத்தில்) உலக மக்கள் அனைவருக்கும் குர்ஆன் ஒரு நல்லுபதேசம் என கூறுகின்றது.
இந்த நல்லுபதேசமான குர் ஆனில் (7ம் அத்தியாயம் 187ம் வசனத்தில்) பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
"அவர்கள் உம்மிடம் இறுதித் தீர்ப்பு நாள் எப்பொழுது வரும்?" என்று கேட்கிறார்கள் நீர் கூறும் அதன் அறிவு என் இறைவனிடத்தில்தான் இருக்கிறது. அது வரும் நேரத்தை அவனைத்தவிர வேறு எவரும் வெளிப்படுத்த முடியாது"........
குர்ஆன் பொய் சொல்லாது. பயப்பட வேண்டாம்.2012 டிசம்பர் 22ந் திகதி மீண்டும் ஒருமுறை இந்தச் செய்தியைப் பார்த்தால் குர்ஆனில் சொல்லப்பட்டவை உண்மை என்பதை எவரும் அறியலாம்.
