”நீங்கள் நன்மையிலும், இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள், பாவத்திலும் வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள் அவன் கடுமையாக தண்டிப்பவன்" (05,02)

தெஹிவளை கல்வல வீதி மதரஸாவுக்கு எதிரான ஆர்ப்பாட்டம்

தெஹிவளை பிரதேசத்தில் கல்வல வீதியில் அமைந்துள்ள சிறுவர் மதரஸா ஒன்றுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. தெஹிவளை பிரதேசத்தின்  கல்வல வீதி மிருகக்காட்சி சாலைக்கு பின்புறம் அமைந்துள்ள சிறுவர் மதரஸாவாகவும் , மஸ்ஜித்தாகவும் இயங்கிவந்த கட்டடத்திற்கு எதிராகவே அந்த ஆர்ப்பாட்டம் பெளத்த பிக்குகள் தலைமையில் இடம்பெற்றுள்ளது .

குறித்த கட்டிடம் சட்டவிரோதமான கட்டடம் என்றும், அனுமதி பெறாமல் மஸ்ஜித்தாக இயங்குவதாகவும் கூறியே அதற்கு எதிராக ஆர்பாட்டம்  மேற்கொள்ளபட்டுள்ளது. கடந்த 26 ஆம் திகதி பெளத்த பிக்குகள் தலைமையில் பேரணியாக சென்ற ஆர்ப்பாட்டம் குறித்த மதரஸாவை சூழ்ந்து அங்கு நுழைந்துள்ளது எனினும் போலீசார் அதை தடுத்து நிறுத்தியுள்ளனர் என்று அந்த பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். குறித்த மதரஸா 140 பேர்ச் கொள்வனவு செய்யப்பட்ட காணியில் சிறிய மதரஸாவாக இயங்கி வருவதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.
கடந்த ஜூன் மாதம் கொழும்பு தெஹிவளை கல்போவில பாத்தியா மாவத்தையில் அமைந்துள்ள அல் பௌசுல் அக்பர் மதரஸா, மஸ்ஜித் ஒன்றுக்குள் பெளத்த மதகுருமார்கள் சிலர் நுழைந்து அதனை மூடிவிடுமாறு எச்சரிக்கை விடுத்ததை தொடந்து அது மூடப்படும் அச்சுறுத்தலை எதிர்கொண்ட போதும் உரிய நேரத்தில் சமூக தலைமைகளும் , அரசியல் பிரதிநிதிகள் சிலர் மேற்கொண்ட நடவடிக்கைகளால் இன்று  பௌசுல் அக்பர் மதரஸா, மஸ்ஜித் முழு அளவில் இயங்கிவருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
அல் பௌசுல் அக்பர் மதரஸா, மஸ்ஜித்திற்கு தேவையான போது போலீஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டு வருகின்றது என்று பாத்தியா மாவத்தை மஹல்லா வாசிகள் தெரிவித்தனர்.
பெளத்த பிக்குகள் தலைமயிலான ஆர்பாட்டத்தைத் தொடர்ந்து தற்போது அந்த குறித்த மதரஸா மற்றும் மஸ்ஜித் போலீசாரினால் மூடப்பட்டுள்ளது என்று அறிய முடிகின்றது .


Share this article on :
 
© Copyright 2010-2011 ஜும்ஆ All Rights Reserved.
Template Design by Herdiansyah Hamzah | Published by Borneo Templates | Powered by Blogger.com.